முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா.வுக்கு பாக்., கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.13 - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 12 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சினைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கோரி பாகிஸ்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாகிஸ்தான், எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று ஐ.நா.விற்கு கடிதம் எழுதியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1–ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பான் கீ முனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப்பின் ஆலோசகரும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுர்தாஜ் அஜீஸ் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறது. என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்