முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ்-க்கு எதிராக ஈராக்கியர்கள் போரிட வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, அக் 15 - ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், தாய்நாட்டை மீட்பதற்காக ஈராக்கியர்கள்தான் அந்த அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றிருந்தார். அந்நாட்டு அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மறு நிர்மாணத்துக்காக நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கெய்ரோவில் செய்தியாளர்களிடம் ஜான் கெர்ரி கூறியதாவது: தாய்நாட்டை மீட்பதற்காக ஈராக்கியர்கள்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும். குறிப்பாக ஐ.எஸ். அமைப்பினர் அன்பர் மாகாணத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றி உள்ளனர். அங்கு வசிப்பவர்கள் ஈராக்கியர்கள். அவர்கள்தான் அந்த அமைப்புக்கு எதிராக போரிட வேண்டும். அதே நேரம், ஈராக் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. அதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

இதுபோல் சிரியாவின் கொபானே நகரையும் கைப்பற்று வதற்கான முயற்சியில் ஐ.எஸ். அமைப்பு முயன்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டுப் படையை அமைக்க சிறிது காலம் பிடிக்கும் என்று முன்பிருந்தே கூறி வருகிறோம். இப்போது ஐ.எஸ். அமைப்பை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான உதவியை அளிக்க 60-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதி பூண்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்