முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவாஸ்கர் - ரவிசாஸ்திரியின் பிசிசிஐ சம்பலம் அதிகம்!

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக்.15 - இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அதிக சம்பளம் வாங்குவதில் அணி கேப்டன் தோனி, துணை கேப்டன் கோலி ஆகியோரை முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் விஞ்சிவிட்டனர்.

கவாஸ்கர், ரவிசாஸ்திரி இருவரும் இந்த ஆண்டில் ரூ.6 கோடிக்கு மேல் பிசிசிஐ-யிடம் இருந்து சம்பளமாக பெற்றுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, துணை கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்தைவிட அதிகமாகும். கடந்த 12 மாதங்களில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என மொத்தம் 35 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனிக்கு பிசிசிஐ ரூ.2.59 கோடி சம்பளம் கொடுத்துள்ளது. 39 போட்டி களில் விளையாடியுள்ள துணை கேப்டன் விராட் கோலிக்கு ரூ.2.75 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரி, கவாஸ்கர் ஆகியோர் பிசிசிஐ-யால் வர்ணனையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4 கோடியை பிசிசிஐ வழங்குகிறது. இது தவிர இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தும் பொறுப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கவாஸ்கரிடம் அளிக்கப் பட்டது.

இதற்காக அவருக்கு கூடுதலாக 2.37 கோடி சம்பளம் தரப்பட்டது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்ததை அடுத்து ரவி சாஸ்திரி இந்திய அணியின் மேலாளராக நியமிக் கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்