முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ்-க்கு எதிரான நடவடிக்கை: ஒபாமா ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.27 - இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) தீவிரவாத அமைப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதுடன் சில பகுதிகளை தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துள் ளனர். அப்பகுதியை இஸ்லாமிய நாடு என அவர்கள் அறிவித்துள் ளனர். அமெரிக்கா, சர்வதேச நாடு களுடன் இணைந்து ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலகத் தில் இது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் ஒபாமா, துணை அதிபர், வெளியுறவு, நிதி, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈராக், சிரியாவில் இப்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் ஒபாமா கேட்டறிந்தார்.

ஐஎஸ் தீவிரவாதி களின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு ஏதுவாக, ஈராக் ராணுவத்துக்கு பயிற்சி, ஆலோசனை, ஆயுத உதவி வழங்கி வருவது குறித்தும் ஒபாமா மறு ஆய்வு செய்தார். சிரியாவில் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவது மற்றும் அவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவைத் தொடர்வதற்கான வழிகள் குறித்தும் பாதுகாப்பு குழு வினருடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார் என அதில் கூறப்பட் டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும்போது, "ஐஎஸ் ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் மிக முக்கிய பங்கு வகிக்கும். இதுதொடர்பாக சர்வதேச நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவ தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகமும் மிக முக்கியப் பங்கு வகிக்கும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்