உதான் திட்டம்: பிரதமருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 30– உதான் திட்டம் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழகத்தில் கூடுதல் பயிற்சி மையங்கள் வேண்டும் என்று Kjyik¢r® . X. g‹Ü®bršt« வலியுறுத்தியுŸsh®.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

திறமைமிக்க மாணவிகள் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரிகளான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.க்கள்) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.க்கள்) போன்றவற்றில் சேர்ந்து படிப்பதற்காக தேர்வு எழுத ‘உதான்’ என்ற புதிய திட்டத்தை ‘சி.பி.எஸ்.இ.’ அறிவித்துள்ளதை அறிவேன்.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கல்வி வாரியங்களில் படிக்கும் 11 மற்றும் 12–ம் வகுப்பு மாணவிகள் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என். ஐ.டி.க்களில் சேர சிறப்பு ஆன்லைன் மூலம் நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்கான விண்ணப்ப படிவம் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயிற்சி வகுப்பு மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 நகரங்களில் மட்டுமே அந்த மையங்கள் உள்ளன. கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

இங்கு இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற மாணவிகள் அதிக அளவில் உள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள 151 பயிற்சி வகுப்பு மையங்களில் தமிழ்நாட்டுக்கு 2 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு பல மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மாணவிகளை கொண்ட பெரிய மாநிலமாக தமிழகத்துக்கு 2 மையங்கள் மட்டும் போதுமானது அல்ல.

மேலும் தொடர்பு வகுப்புகளுக்கு செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய அச்சம் நிலவுவதால் தகுதியான மாணவிகள் பங்கேற்பது குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டில் சென்னை மிகப்பெரிய நகரமாகும். மெட்ரோ பாலிடன் நகரமான அது தொடர்பு மைய பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே தகுதியான மாணவிகள் பலர் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போகும்.

எனவே தகுதியுள்ள மாணவிகள் பங்கேற்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்.

எனவே உதான் திட்டத்தில் மாணவிகள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில் சென்னையை சேர்த்து அதிக இடங்களில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

மேலும் அதிக அளவில் மாணவிகள் சேரும் வகையில் அதற்கான விண்ணப்பம் செய்ய வருகிற நவம்பர் 30–ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: