முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் உரிமையில் இந்தியாவுக்கு 114-வது இடம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், அக் 30 - பெண்களுக்கு சம உரிமை வழங்கும் 142 நாடுகளின் பட்டியலில் இந்தியா 114வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

உலக பொருளாதார அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் இந்த பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியா 101வது இடத்தில் இருந்தது. இந்த முறை 13 இடங்கள் சரிந்து இந்த இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கான பொருளாதார உரிமைகள், கல்வி, சுகாதாரம், உயிர்வாழ்தல் ஆகிய பிரிவுகளில் சராசரிக்கும் குறைவான புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், பெண்கள் வருவாய், கல்வியறிவு ஆண், பெண் பிறப்பு விகிதம் ஆகியவற்றில் மிக மோசமான 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. எனினும் அரசியல் ரீதியாக பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் மிக சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் யேமன் நாடு உள்ளது. அதற்கு முன்னதாக 141வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. பட்டியலில் இலங்கை 79வது இடத்தை பிடித்துள்ள நிலையில் 87வது இடத்தில் சீனா உள்ளது. பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் குறித்து நாடு வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு 2006ம் ஆண்டு முதல் டபிள்யூ. இ எப் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்