முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புடினுக்கு புற்று நோய் என்று வதந்தி: ரஷ்யா கண்டனம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, அக் 31 - ரஷ்ய அதிபர் புடின் கணைய புற்று நோயால் அவதிப்படு வதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜெர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் நான் புடினுக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து புடினின் செய்தி தொடர்பாளர் டிமிடரி பெஸ்கோவ் மாஸ்கோவில் நிருபர்களிடம் கூறுகையில், புடின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். இது போன்ற சூழ்ச்சிகளை அவர்கள்(அமெரிக்கா) நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார். கடந்த சில ஆண்டுகளாகவே புடின் குறித்து இது போன்ற வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது புடின் புற்றுநோயால் அவதிப்படுவதாக வதந்தி பரவி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்