முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார - சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், நவ.01 - ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளுடன் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இ.சி.ஓ.எஸ்.ஓ.சி. அமைப்பில் இந்தியா உட்பட 18 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சார்பில் 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியா 183 வாக்குகளும், ஜப்பான், பாகிஸ்தான் தலா 181 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றன. புதிய உறுப்பினர்கள் 2015, ஜனவரி 1-ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய உறுப்பினர்களுக்கான (2015-17) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்