முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவை ஆதரிக்கும் இலங்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, நவ 3 - இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை மீண்டும் இடம் கொடுத்துள்ளது.

இந்தியாவின் நட்பு நாடு என்று கூறி கொள்ளும் இலங்கையானது இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தானுடனும், சீ னாவுடனும் மறைமுகமாக நட்பு பாராட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சீன ராணுவத்துக்கு இடம் அளித்து வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும் பயிற்சி அளிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இலங்கைக்கு உதவுவதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ராணுவ நடமாட்டத்தை பெருக்கி கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சீனாவின் மேலும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் இடம் அளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல்களால் பாக்ஜலசந்தியில் இந்தியாவுக்கு இடையூறு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது பற்றி இலங்கைக்கு மீண்டும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே பகை இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் வியட்நாம் பிரதமர் குயென் டன் டங் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது வியட்நாமுடன் இந்தியாவின் நட்புறவை மேலும் பலப்படுத்த பேச்சு நடத்தப்பட்டது. வியட்நாம் பிரதமர் இந்தியா வந்து சென்ற சில நாட்களிலேயே சீனா மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்திய கடல் பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தை பெருக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கையும் ஆதரவு அளிப்பது இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இலங்கையில் சீனாவின் ராணுவ நடமாட்டம் ஏதும் இல்லை என்றும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் என்றும் இலங்கை உறுதி அளித்து இருந்தது. தற்போது அதை மீறும் வகையில் இலங்கையின் செயல்பாடு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago