முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் இலங்கை வருகை: தமிழர் பகுதிக்கு செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ 3 - இலங்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினரும் பெருமளவில் வசிக்கிறார்கள். தமிழர் பகுதியில் ஏராளமான கிறி்ஸ்தவ ஆலயங்கள் உள்ளன. அங்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் ஜனவரி மாதம் 13ம் தேதி கொழும்பு செல்கிறார். 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் வடக்கில் உள்ள தமிழர் பகுதிக்கும் செல்கிறார். மன்னார் மாவட்டம் மது என்ற இடத்தில் 300 ஆண்டு பழமைவாய்ந்த புனிதமேரி ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று அவர் பிரார்த்தனை செய்கிறார். இலங்கையில் முன்பு போர் நடந்த காலத்தில் ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களும் குண்டுவீ சி தாக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் அங்குள்ள பாதிரியார்கள் இது தொ டர்பாக போப் ஆண்டவருக்கு புகார் அனுப்பி வந்தனர். இந்த நிலையில் போப் ஆண்டவர் இலங்கை வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்