முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்!

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜீங், நவ.03 - சீனா சோதனை அடிப்படையில் நிலவுக்கு அனுப்பிய ஆளில்லா விண்கலம் அங்கு சென்றுவிட்டு நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

முன்னாள் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய இந்த சாதனையை நிறைவேற்றிய 3வது நாடாக சீனா பேரெடுத்துள்ளது. விண்கலத்தை ஒரு வாரத்துக்கு முன் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி அங்கிருந்து பூமிக்கு திரும்பு வதை சோதித்துப் பார்க்க இந்த விண்கலத்தை சீனா அனுப்பி யது. ஏற்கெனவே நிர்ணயித்தபடி மங்கோலியா தன்னாட்சிப் பகுதி யில் உள்ள சிசிவாங் பான்னர் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கியது. இந்த விண்கலம் நிர்ணயித்த பகுதியில் தரையிறங்கியதை அதற் காக அமைக்கப்பட்ட குழுவினர் கண்டறிந்தனர். பெய்ஜிங்கிலிருந்து 500 கிமீட்டர் தொலைவில் இந்த விண்கலம் தரையிறங்கியது.

இந்த தகவலை அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல் நிலவுக்கு சென்று பூமி திரும்பும் விண்கலத்தை1970களில் முந்தைய சோவியத் யூனி யன் சாதித்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட சீன விண்கலம் சுமார் 840000 கிலோ மீட்டர் பயணம் செய்து 8 நாள் பயணத்தை முடித் துக் கொண்டு பூமி திரும்பியது. இந்த பயணத்தில் பூமி, நிலவின் படங்களை இந்த விண்கலம் அனுப்பியது. பூமிக்கு விண்கலம் திரும்பும் பணி உள்ளூர் நேரப்படி 6.13 மணிக்கு தொடங்கி யது. வினாடிக்கு 11.2 கிமீ என்ற அளவிலான திசைவேகத்தில் பூமிக்கு விண்கலம் திரும்பியது.

மிக அதிக வேகத்தில் விண்கலம் இறங்கியதால் காற்றுடன் ஏற்பட்ட உரசலில் அதிக வெப்பம் ஏற்பட்டு விண்கலத்தின் புறப்பகுதி அதிக சூடு அடைந்தது. தொழில்நுட்ப உத்தியை கையாண்டு வேகத்தை கட்டுப்படுத்தி மிக பத்திரமாக விண்கலம் தரையிறக்கப்பட்டது என விண்வெளி ஆய்வு தொழில் நுட்பத்தின் பெய்ஜிங் மைய தலைமை பொறியாளர் சூ ஜியான் லியாங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்