முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி தீவில் கடும் நிலநடுக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஹாங்காங், நவ.03 - பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் சுனாமி தாக்க வாய்ப்பில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்திருக்கிறது. இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது. இந்நிலையில் பிஜி தீவில் நேற்று காலை 6.57 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. வீடுகளில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. ஆனால், சுனாமி தாக்குவதற்கான அறிகுறிகள் இல்லை என்று ஹவாய் தீவில் இயங்கும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், பிஜி தீவின் தெற்கே 570 கி.மீ. தொலைவில் உள்ள ஈஸ்டர் தீவில் கடந்த மாதம் 7.2 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்