முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை: அரியானா முதல்வர்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

சண்டிகர், நவ.04 - அரியானாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலத்தில் மாநில அரசிடம் இருந்து வதேராவுக்கு சொந்தமான நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் அடைந்ததாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையிலும் அரியானாவில் பூபிந்தர்சிங் ஹூடா ஆட்சிக்காலத்தில் அரசு நிலத்தை மிக குறைந்த விலைக்கு வதேராவின் நிறுவனம் வாங்கி அதை டி.எல்.எப் நிறுவனத்துக்கு விற்பனை செய்து ரூ. 44 கோடி லாபம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 40 கோடி பணத்தை பூபிந்தர்சிங் ஹூடா அரசு மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் சண்டிகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

அரியானாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வதேராவின் நிறுவனம் ரூ. 44 கோடிக்கு லாபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் நில ஒப்பந்த விவகாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் நில ஊழல் விவகாரங்கள் குறித்தும் சட்டம் தனது கடமையை செய்யும். அரியானா மக்களுக்கு வெளிப்படையான நேர்மையான ஆட்சியை பாஜ அரசு தரும். ஊழலை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்