முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதையாத்திரை பக்தர்களுக்கு நேரடி தரிசனம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ.05 - திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். இதன் காரணமாக தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் சில நாள் 30 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதாக இந்த நிலை ஏற்படுவதாக தேவஸ்தானம் கருதுகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. விரைவில் இது அமுல்படுத்தப்படும் என்று கோவில் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தர்ம தரிசன பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளோம் என்றார்.

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை 6 மணி வரை 41.815 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 18 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர். கோவிலில் நேற்று சால கட்லா கைசிக துவாதசி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மலையப்பசாமி வீதி உலா வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்