முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகா தாக்குதல்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், நவ.05 - பாகிஸ்தானின் வாகா எல்லையில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக மூன்று தீவிரவாத அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 8 குழந்தைகள், 10 பெண்கள், 3 ராணுவ வீரர்கள் உள்பட 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் அம்ரிஸ்தர், பாகிஸ்தானின் லாகூர் இடையே அமைந்துள்ள எல்லை நுழை வாயில் பகுதியில் நாள்தோறும் மாலையில் கொடியிறக்கம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகாவில் கொடியிறக்க நிகழ்ச் சியை பார்த்துவிட்டு வாகன நிறுத்துமிடம் அருகே திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப் படைத் தீவிரவாதி தாக்குதல் நடத்தினார்.

இந்த குண்டு வெடிப்பில் 52 பேர் உயிரி ழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக வாகா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 20 பேரை பிடித்து தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டத்துறை அமைச்சர் முஜ்தபா ஷுஜார் ரெஹ்மான் கூறும்போது, "எல்லைப் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாகவே இத்தாக்குதலை தடுக்க இயலாமல் போனது. பல அடுக்கு பாதுகாப்பை மீறி தீவிரவாதி எப்படி அந்த பகுதிக்கு வந்திருக்க முடியும் என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்" என்றார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப் பேற்பதாக அல் காய்தாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் தலிபானிலிருந்து பிரிந்து சென்ற ஜண்டுல்லா தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. அதே சமயம், ஜமாத் உல் அஹ்ரார் என்ற அமைப்பும், தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago