முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 ஆண்டுக்கு பிறகு வர்த்தக மையம் செயல்பாட்டுக்கு வந்தது

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ 6 - அமெரிக்காவில் அல்கொய்தா பயங்கரவாதிகளால் கடந்த 2001ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டு மீ ண்டும் எழுப்பப்பட்டுள்ள உலக வர்த்தக மையம் 13 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பட தொடங்கியுள்ளது.

அந்த 104 மாடி கட்டிடத்தின் 25 அடுக்குகளை குத்தகைக்கு எடுத்துள்ள காண்டி நாஸ்ட் பதிப்பக நிறுவனத்தின் 175 பணியாளர்கள், அந்த கட்டிடத்தில் த ங்கள் பணியை தொடங்கினர். ஒன்வேர்ல்டு டிரேட் சென்டர் என்றழைக்கப்படும் இந்த வர்த்தக மையம் 390 கோடி டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது. 1,776 அடி உயரத்தில் இது அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடமாகும். உலக அளவில் நான்காவது மிக உயர்ந்த கட்டிடம் இது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் 2,700க்கும் அதிகமானோர் பலியான அதே இடத்தில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்