முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்

புதன்கிழமை, 5 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், நவ.06 - அணு ஆயுதங்கள் தீவிரவாத குழுக்களிடம் சிக்கும் அபாயம் உள்ளது என்பதை பரவலாக உலக நாடுகளே ஏற்கின்றன. எனவே இந்த ஆயுதங்களை பத்திரமாக பாதுகாத்து வைக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உள்ளது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமையின் வருடாந்திர அறிக்கை மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரக செயலர் அபிஷேக் சிங் நேற்று முன்தினம் தாக்கல் செய்த அறிக்கை வருமாறு: அணு ஆயுதங்கள் அரசு சாரா குழுக்களிடம் சிக்கும் அபாயம் உள்ளது. இதை எப்பாடுபட்டாவது தடுக்கவேண்டும். அணு ஆயுத தீவிரவாதம் உருவாகி இருப்பதை பலரும் உண்மை என ஏற்கின்றனர். இது சர்வதேச சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும்.

அணு ஆயுத பாதுகாப்பை வலுப்படுத்தவும் இவை தீவிரவாதிகள் கையில் சிக்காமல் தடுக்கவும் அணு ஆயுத நாடுகளின் பொறுப்பான நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அணு ஆயுத பாதுகாப்பை வலுப்படுத்த சர்வதேச அணு சக்தி முகமை எடுக்கும் நடவடிக்கை களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே அணு ஆயுத பாதுகாப்பு நிதிக்கு இந்தியா தாமாக முன்வந்து நிதியுதவி செய்துள்ளது.

இந்தியா, மின் உற்பத்திக்காக அணு சக்தியை பயன்படுத்தும் அதேவேளையில் அணு ஆயுதங்களின் பாதுகாப்புக்கு முழு முனைப்பும் முன்னுரிமையும் அளித்து வருகிறது.

அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதற்கு அணு மின்சார உற்பத்தியும் அவசிய மாகிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்