முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் ஒரே நாளில் உண்டியல் ரூ.2.60 கோடி வசூல்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ 7 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை 32,073 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தார்கள். அதன்பிறகு தர்ம தரிசனத்துக்காக 12 கம்பார்ட்மென்டுகளில் பக்தர்கள் காத்து இருந்தனர். இவர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்து இருந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தங்குதடையின்றி தரிசனத்துக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் உண்டியல் வருமானம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 2. 50 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. நேற்று முன்தினம் காலை சினிமா பாடகர் மனோ ஏழுமலையானை வழிபட்டார். கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையானை பற்றி பாட வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டும் அது போல் வாய்ப்பு பெற்றது எனது பாக்கியம் என்று மனோ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago