முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையை தேசிய யாத்ரீகர் மையமாக அறிவிக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ.07 - கேரளத்தில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்திருக்கும் சபரிமலையை தேசிய யாத்ரீகர் மையமாக அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுக்கவுள்ளது.

தென் மாநிலங்களின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கான பல்வேறு திட்டங்களை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள் படிப்படியாக நிறை வேற்றப்படும். சபரிமலையை தேசிய யாத்ரீகர் மையமாக அறிவித்து, அங்கு நடைபெறும் மேம் பாட்டுப் பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளோம்.

சபரிமலையில் நடைபெற உள்ள மகரவிளக்கு திருவிழா தொடர்பாக கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு ரமேஷ் சென்னிதலா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்