முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சக்திவாய்ந்த மனிதர்கள்: 15-வது இடத்தில் மோடி

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், நவ.07 - ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல்முறை மோடி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

உலகின் சக்திவாய்ந்த 72 மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடி 15-வது இடத்திலுள்ளார். மோடியை 'இந்து தேசியவாதி' என்று வர்ணித்துள்ள ஃபோர்ப்ஸ், 2002-ம் ஆண்டு நடந்த குஜாராத் கலவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.

"குஜராத் மாநிலத்தை சீரமைத்தவர் என்ற பெருமையுடைய மோடியின் நிர்வாகம், இந்தியாவின் மற்ற பகுதிகளின் பொருளாதாரத்துக்கும் உயிரூட்டுவதாக நம்பிக்கையளிக்கிறது. இந்தியர்களைப் போலவே உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் மோடியின் நிர்வாகத்திறனை வியந்துள்ளனர். இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அண்டை நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்" என்று ஃபோர்ப்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மேலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி 36-வது இடத்திலும், தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா 64-வது இடத்திலும் உள்ளனர்.

இதே பட்டியலில் சென்ற வருடம் 21-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர், இந்த முறை பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago