முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் நைஜீரியருக்கு ஜெயில்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.7 -   நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் டமாஸ் (வயது 28). இவரை சென்னை மெரினா கடற்கரையில் வைத்திய தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி 11-ந் தேதி சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஜி.பி.ரோட்டில் அவர் தங்கியிருந்த விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அங்கு 122 கிராம் ‘கொகைன்‘ என்ற போதைப் பொருளை 122 பொட்டலங்களாக டமாஸ் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து அதிகாரிகள், அந்த வாலிபரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

இவர் மீதான வழக்கு போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், டமாசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிப்பதாக கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்