முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மீசை முருகேசன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ 10 - நடிகர் மீசை முருகேசன் சென்னையில் காலமானார். சிறிது காலமாக உடல்நலக்குறைவுடன் இருந்த அவர் சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கோவை இடிகரை பகுதியை சேர்ந்த மீசை முருகேசன். 1985ம் ஆண்டு சுகமான ராகங்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து உயிரே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப்படை, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதுவரை 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்