முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கள்ள மார்க்கெட்டில் லட்டு விற்ற 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, நவ 10 - திருப்பதி, திருச்சானூர் சாலையில் உள்ள சிந்து சர்க்கிள் என்ற இடத்தில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் வெங்கடரத்தினம், அமலேஸ்வர் ரெட்டி மற்றும் சிப்பந்திகள் சிந்து சர்க்கிளில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.

அப்போது அங்கு கள்ளமார்க்கெட்டில் திருப்பதி லட்டு பிரசாதம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து 60 சிறிய லட்டு, 15 பெரிய லட்டு, 20 வடை மற்றும் 2 ஜிலேபி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் நாகராஜ ரெட்டி என்றும், திருப்பதி கபிலதீர்த்தம் சாலையில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது. தனது கடை உரிமையாளர் சம்பத், இந்த பிரசாதத்தை கொடுத்து விற்க சொன்னதாக நாகராஜ் ரெட்டி தெரிவித்தார். நாகராஜ் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் அசல் பிரசாதம் என்று கண்டறியப்பட்டுள்ளதால் அவை எப்படி கிடைத்தன என்று சம்பத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றும் சீனிவாஸ் என்ற ஊழியர் சம்பத்துக்கு லட்டு பிரசாதத்தை வழங்கி வந்தார் என தெரியவந்தது. அதை தொடர்ந்து நாகராஜ் ரெட்டியையும், சம்பத்தையும் பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து திருச்சானூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீ தும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் லட்டு பிரசாதத்தை சிற்றுண்டி கடைக்காரருக்கு வழங்கி வந்ததாக கூ றப்படும் தேவஸ்தான ஊழியர் சீனிவாசிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago