முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள்: கோலி சாதனை

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ.11 - குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. டோணி ஓய்வில் இருப்பதால், தற்போது நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாகவும் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் கோலி 53 ரன்கள் விளாசினார். இது அவர் விளையாடிய 144 வது போட்டியாகும். இதில் 136 முறை அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார். இந்த பேட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து இதுவரை கோலி 6003 ரன்கள் குவித்துள்ளார்.

பேட்டிங் ஜாம்பவானான மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 156 போட்டிகளில் விளையாடி 141 போட்டிகளில் களம் கண்டு ஆறாயிரம் ரன்களை கடந்திருந்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இப்போது 144 போட்டிகளில், 136வது இன்னிங்சிலேயே கோலி அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

ஆனால் 95 இன்னிங்சுகளில் 4790 ரன்கள் குவித்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா இதேபோன்ற விளையாட்டை வெளிப்படுத்தினால் கோலி சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. மேலும், நடப்பாண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்திலுள்ளார். இந்தாண்டு கோலி 19 போட்டிகளில் ஆடி 849 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 49.94 ஆகும். ஆறாயிரம் ரன்களை கடந்த 8வது இந்திய வீரரும் இவரே.

இதனிடையே சத்தமின்றி, ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவானும் ஒரு சாதநை படைத்துள்ளார். அவர், 48 இன்னிங்சுகளில் விளையாடி 2 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டியது தவான்தான். உலக அளவில் ஐந்தாவது இடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்