Idhayam Matrimony

300 ரூபாய் டிக்கெட்டை ரூ.1000க்கு விற்ற புரோக்கர் கைது

புதன்கிழமை, 12 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, நவ 13 - மும்பையை சேர்ந்த பக்தர்கள் 6 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் 6 பேரில் 4 பேர் மட்டும் 300 ரூபாய் கட்டண ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வைத்திருந்தனர். மேலும் அவர்கள் பெயரில் 2 தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அறையில் தங்குவதற்காக சென்ற போது அவர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்து எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட்டை 1000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர். விசாரணையில் திருப்பதியை சேர்ந்த இடைத்தரகர் ஷபீர் ஆன்லைன் டிக்கெட்டை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஷபீரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மும்பை பக்தர்கள் 6 பேர் தங்களது முகவ ரி, போட்டோ, அடையாள அட்டை போன்றவற்றை புரோக்கர் ஷபீருக்கு இமெயிலில் அனுப்பி வைத்தனர்.அவர் 300 ரூ பாய் டிக்கெட்டை முன்பதிவு செய்தார். 6 பேரில் 4 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. அந்த டிக்கெட்டை கொடுத்து ஒரு டிக்கெட்டுக்கு ரூ. ஆயிரம் வீதம் 4 டிக்கெட்டுகளுக்கு ரூ. 4 ஆயிரம் வசூலித்தார். மேலும் ஆதித்யா பிர்லா தங்கும் விடுதியில் மேலும் 2 அறைகளை முன்பதிவு செய்து கொடுத்து அதற்கு 3 மடங்கு தொகையை வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்