முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கானை கைது செய்ய பாக். நீதிமன்றம் பிடிவாரண்ட்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ 14 - பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் முன் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரை போலவே அவாமி கட்சி தலைவர் தாஹிர் உல் காத்ரியும் போராட்டம் நடத்தினார். இவர்கள் இருவர் மீதும் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை இம்ரான்கானும், காத்ரியும் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் முன் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களும், காத்ரியின் அவாமி கட்சி ஆதரவாளர்களும் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூ ர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் மீது இரு கட்சியினரும் தாக்குதல் நடத்தினார்கள். அத்துடன் பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதை தொடர்ந்து இஸ்லாமாபாத் நகருக்கு நுழையும் அனைத்து பகுதிகளையும் ராணுவத்தினர் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து நாட்டில் வன்முறையை தூண்டும் விதத்தில் ஐக்கிய அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று நவாஸ் ஷெரீப் அரசு இஸ்லாமாபாத்தில் தலைமை செயலக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், அவாமி கட்சி தலைவர் தாஹிர் உல் காத்ரி, இன்சாப் கட்சி துணை தலைவர் ஷா மெக்மூத் குரேஷி, ஆசாத் உமர், கைபர் பக்துன்சுவா பிராந்திய முதல்வர் பர்வேஸ் கத்தாக், அவாமி கட்சி தலைவர் ரஷீக் அப்பாசி ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்