முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடைதிறப்பு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, நவ 14 - மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கோயில் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழகம்,புதுவை,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் பூஜை நடைபெறும். அதன் பிறகு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்படும். அதன்படி கார்த்திகை முதல் நாளான வருகிற 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கி 41 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மண்டல பூஜைக்காக முதல் நாள் அதாவது 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படும். மறுநாள் முதல் கணபதி ஹோமம், உச்சிகால பூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் போன்றவை நாள்தோறும் நடைபெறும். இந்த மண்டல பூஜைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி அரவணை, பாயாசம் போன்ற பிரசாதங்களும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பம்பை போன்ற முக்கியமான இடங்களில் மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. கார்த்திகை முதல் நாள் பக்தர்கள் மாலையணிந்து நேர்த்தியாக விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று வருவார்கள். இதையொட்டி ஐயப்பன் கோயில் இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்