முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால் டாக்ஸி கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி வழக்கு

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை, நவ. 14: தமிழகத்தில் இயங்கும் கால் டாக்ஸியின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
 இது தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கே.சஞ்ஜீவி நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: நான் சொந்தமாக கால் டாக்ஸி வைத்து, அதில் டிரைவராக உள்ளேன்.
 தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கால் டாக்ஸிகள் இயங்குகின்றன. இதன் மூலம் 50 ஆயிரம் குடும்பங்கள் கால் டாக்ஸி தொழிலை நம்பியுள்ளனர். சுமார் 10 லட்சம் மக்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர்.
 இதில் குறிப்பாக, பெரு நகரத்தில் கால் டாக்ஸி முகவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்கள், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அதிகமான கட்டணத்தில் மக்களுக்கு சேவையை வழங்குகின்றனர்.
 சில முகவர்கள் பயணிகளிடமிருந்து சேவை வரி வசூலிக்கின்றனர். ஆனால், அந்த வரியை அரசுக்கு செலுத்த முன்வருவதில்லை. குறிப்பாக, மீட்டர் பொருத்தாமல் தோராயமாக பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கவும் செய்கின்றனர்.
 சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு, அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். வாடிக்கையாளரை கவரும் வகையில் விளம்பரம் செய்கின்றனர். இதனால், உள்ளூர் கால் டாக்ஸி உரிமையாளர்கள் பாதிக்கின்றனர். அவர்கள் லாபம் ஈட்டும் வகையில் கால் டாக்ஸியை இயக்க முடியவில்லை.
 சமீபத்தில், ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீட்டர் பொருத்த உத்தரவிட்டது. இதன் பிறகு ஆட்டோக்கள் மீது பாெது மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டது.
 அதனால், கால் டாக்ஸியிலும் மீ்ட்டர் பொருத்தி, கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி அரசுக்கு கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை.
 எனவே, கால் டாக்ஸியில் மீட்டர் பொருத்தி, கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனவில் கோரப்பட்டது.
 இ்நத மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (நவ.13) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago