முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் சூதாட்ட விசாரணை: டிச.8-ல் வாதங்கள் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, நவ.15 - 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டம் ஸ்பாட் பிக்சிங் குறித்த குற்றச்சாட்டுகள் மீதான வாதங்கள் டிசம்பர் 8-ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அன்கீட் சவான் உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிக்கை மீதான வாதப்பிரதிவாதங்கள் டிச.8-ஆம் தேதி தொடங்குகிறது.
டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு, குற்றச்சாட்டுகள் மீதான தனது வாதங்களை தொடங்குவோம் என்று கூறியதையடுத்து கூடுதல் அமர்வு நீதிபதி மீனா பன்சல் டிசம்பர் 8-ஆம் தேதியை விசாரணை தொடங்கப்படும் என்றார்.
குற்றம்சாட்டப்பட்டோர் அதிகமாக இருப்பதால் குழு குழுவாக விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். ஒரே மாதிரியான குற்றம்சாட்டப்பட்டோர் மீதான விசாரணை ஒருசேர நடக்க வேண்டும், இல்லையெனில் இது முடிவுறாத ஒரு வழக்காகி விடும் என்று டிபன்ஸ் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டோரை 6 பிரிவுகளாகப் பிரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதாவது, ஒரு குற்றம் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் ஒட்டுமொத்த சதியிலும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு குற்றங்களைச் செய்துள்ளதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டோர் முதல் பிரிவில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் மற்றும் பிறர் உள்ளனர். 13 பேர் உள்ள 3-வது பிரிவில்தான் கிரிக்கெட் வீரர்களான ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கீட் சவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் ஜனவரி 7-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
போலீஸ் தரப்பில் 6,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் குற்றப்பத்திரிகையும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago