முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் எல்லை விவகாரம்: சீனாவுக்கு மோடி எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜீங், நவ.15 - தென்சீனக் கடல் எல்லை விவகாரத்தில் சீன அரசு சர்வதேச சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்சீனக் கடல் எல்லை பகுதியில் சீனாவுக்கும் பிலிப் பைன்ஸ், வியட்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடிக்கிறது. எண்ணெய் வளம்மிக்க வியட்நாம் கடல் எல்லையில் சீனாவின் சார்பில் எண்ணெய் துரப்பண பணிகளை மேற் கொள்ள முயற்சிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வியட்நாம் போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டதால் சீனா தனது திட்டத்தை கைவிட்டது.

சர்ச்சைக்குரிய அப்பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே ஒப்பந் தம் போடப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. இந்நிலையில் மியான்மர் தலைநகர் நேபிடாவில் நடைபெற்ற கிழக்காசிய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச சட்டம், விதிகளை அனைத்து நாடுகளும் பொறுப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தென்சீனக் கடல் பகுதியில் அமைதியும் ஸ்திரத் தன்மையும் ஏற்பட அங்கு சர்வதேச சட்டத்தை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். சீனாவின் பெயரை பிரதமர் மோடி நேரடியாக குறிப்பிட வில்லை என்றாலும் இது அந்த நாட்டுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித் துள்ளனர்.

மியான்மர் தலைநகர் நேபிடாவில் நடைபெற்ற ஆசியான், கிழக்காசிய மாநாடுகளில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களுக்கு அந்த நாட்டு அதிபர் தெய்ன் சீன் விருந்து அளித்தார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர். அப்போது மோடியை உற்சாகமாக வரவேற்ற ஒபாமா, ‘நீங்கள் ஒரு செயல்வீரர்’ என்று புகழாரம் சூட்டினார். இருதலைவர்களும் தனிப்பட்ட முறையில் ஆசிய அரசியல் நிலவரம் மற்றும் பன்னாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2001-ம் ஆண்டில் ரஷ்யாவில் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண் டார். அந்த பழைய நினைவுகளை மெத்வதேவுடன் அவர் பகிர்ந்து கொண்டார். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

கடந்த ஜூலை மாதம் பிரேசி லில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதினை முதல் முறையாக மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ரஷ்ய உதவியுடன் தமிழகத்தின் கூடங் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் உலையை பார்வையிட வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

15-வது இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் டெல்லிக்கு வருகி றார். அப்போது புதினின் பயணத் திட்டத்தில் கூடங்குளமும் சேர்க்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்