முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிணமூல் எம்.பி. தற்கொலை முயற்சி: அதிகாரிகள் சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா,நவ.15 - சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திரிணமூல் எம்.பி. குணால் கோஷ் தற்கொலைக்கு முயற்சி செய்த விவகாரத்தில் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் சிறைத் துறை மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குணால் கோஷ், சிறையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக நேற்றுக் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக அவர் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை இன்னும் 3 நாள்களுக்குள் கைது செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்' என்று நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனால், அவரை தொடர்ந்து கண்காணித்து வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கண்காணிப்பையும் மீறி அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால், சிறைத் துறை கண்காணிப்பாளரையும், சிறைத் துறை மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony