முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

சனிக்கிழமை, 15 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜாகர்தா, நவ.16 - இந்தோனேசியாவில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, ஜப்பான், தைவான், தெற்கு பசிபிக் தீவுகளில் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 30 செ.மீ. முதல் 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தோனேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி.க்கு அளித்த பேட்டியில், முதல் சுனாமி அலை எழ இன்னும் நேரம் இருந்தாலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏதுவாக முன்கூட்டியே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப அலைகள் பெரியதாக இல்லாமல் இருக்கலாம்" என்றார். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

கடந்த 2004-ம் ஆண்டில், சுமத்ரா தீவுகளின் மேற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியில் அகே மாகாணத்தில் சுமார் 1,70,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்