முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பிரிஸ்பேன், நவ 17 - வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப் பணம் என்பது நாட்டின் ‘பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் சவால்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

5 நாடுகள் அணியான பிரிக்ஸ் தலைவர்களை ஜி-20 மாநாட்டுக்கிடையில் சந்தித்துப் பேசிய மோடி, அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் கருப்புப் பணம் நாட்டின் பாதுகாப்புக்கு விடப்படும் சவால் என்றும், கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதே தனது அரசின் முக்கியமான முன்னுரிமை என்றும் கூறியுள்ளார். இதற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். "என்னைப் பொறுத்தவரையில் இந்த மாநாட்டில் நான் கோர விரும்புவதெல்லாம், கருப்புப் பணத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்பதே" என்றார் மோடி.
எல்லை தாண்டிய வரி ஏய்ப்பு மற்றும் அபரிமிதமான வரிச்சலுகைகளும் தனது அரசின் முக்கியப் பிரச்சினையாகும் என்று அவர் பிரிக்ஸ் தலைவர்களிடம் தெரிவித்தார். மோடியைத் தவிர இந்தச் சந்திப்பில், சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்