முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின் டெண்டுல்கர்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நெல்லூர், நவ 17 - முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜுவாரி கண்டரிகா கிராமத்தை தத்தெடுத்தார்.

'எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை' கடந்த சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட பலரும் எம்.பி.க்கள் மாதிரி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விருப்பப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தை தத்தெடுத்துப் பேசிய சச்சின், "தடையில்லா மின்சாரம், குடிதண்ணீர் வசதி, வை-பை இணைப்பு, உயர்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை ஆகினவற்றை கிராமத்தில் ஏற்படுத்தித் தருவேன் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "போதைப் பழக்கம், புகையிலைப் பழக்கத்தை கிராமவாசிகள் கைவிட வேண்டும். போதை வஸ்துகளுக்கு அடிமையாவதை விடுத்து தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் பழக்கத்திற்கு அடிமையாகுங்கள். உங்கள் பிள்ளைகளை அவர்கள் விரும்பும் துறையில் ஊக்குவிக்குங்கள் அவர்கள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். நான், இன்னொரு கிராமத்தையும் தத்தெடுக்க உள்ளேன்.

நான் இன்னொரு முறை இந்த கிராமத்துக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். அது நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே அமையும். எனது கோரிக்கைகளை ஏற்று நடந்தால் நான் திரும்ப வருவேன்" இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கிருஷ்ணம்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த சச்சினை, நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். சச்சின் வருகையையொட்டி கிராமத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago