முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 மாநாட்டில் ஜெர்மனி பிரதமருடன் மோடி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பிரிஸ்பேன், நவ 17 - ஜி 20 மாநாட்டில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் சவுதி அரேபியா இளவரசரை நரேந்திர மோடி சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி - 20 நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நிறைவு நாளான நேற்று மாநாட்டின் இடைவேளையின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்தார். அப்போது நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமானது. உங்களது வருகையை எங்கள் நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது என பிரதமர் மோடியிடம் மெர்கல் தெரிவித்தார். இந்த தகவலை வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரேவுக்கு சென்ற போது வழியில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்று ஏஞ்சலா மெர்கலை சந்திக்க மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் நள்ளிரவுக்கு மேல் ஆகி விட்டதால் பெர்லினுக்கு செல்லாமல் பிரேசிலுக்கு சென்றதால் அவரை சந்திக்க முடியவி்ல்லை. ஏஞ்சலா மெர்கலை தொடர்ந்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல் அசீசையும் மோடி சந்தித்தார். அப்போது நட்பு நாடான இந்தியாவுக்கு அனைத்து தரப்பிலும் ஒத்துழைப்பு தர சவுதி அரேபியா தயாராக உள்ளது என்று இளவரசர் ஆசிஸ் தெரிவித்ததாக சையத் அக்பருதீன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்