முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை வல்லரசாக விருப்பப்படுகிறேன்: மோடி பேச்சு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சிட்னி, நவ.18 - உலகளாவிய அளவில் இந்தியா வல்லரசாக விருப்பபடுகிறேன் என்று ஆஸ்திரேலிய வாழ் இந்தியர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஜி-20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை சிட்னி நகருக்கு வந்தடைந்தார்.

சிட்னியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டல் புல்மனுக்கு செல்லும்போது, ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளாக அங்கு வந்த 4 நடன கலைஞர்கள் அவர்களது பாரம்பரிய நடனமாடி மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடிக்கு பாரம்பரிய பழங்குடியின வேட்டைக் கருவியாக உபயோகப்படுத்தப்படும் 'பூமராங்' எனப்படும் கருவியை அவர்கள் பரிசாக அளித்தனர். அங்கிருந்து சிட்னி நகரில் உள்ள அல்போன்ஸ் ஒலிம்பிக் பூங்காவில் உரை நிகழ்த்துவதற்காக புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பாரம்பரிய முறையிலான வரவேற்புடன் ஒலிம்பிக் பூங்கா மேடை ஏறிய பிரதமர் மோடியை 16,000-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் கைதட்டலுடன் வரவேற்றனர்.

பின்னர் இந்திய நேரப்படி 1.23-க்கு தந்து உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நீங்கள் அளித்திருக்கும் சிறப்பான வரவேற்பும் மரியாதையும் எனக்கானது அல்ல. இவை அனைத்தும் எனக்கு வாக்களித்து மக்களைச் சேர வேண்டியது. சிட்னி நகரின் தோற்றம் உலகின் அனைத்து மக்களையும் கவர்ந்திழுக்க கூடியதாக உள்ளது.

சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே, சுவாமி விவேகானந்தர் கூறினார்... '50 ஆண்டுகளுக்கு உங்களது கடவுளை மறந்து பாரதத்தை மட்டுமே வணங்குங்கள்' என்று. நாம் இந்தியாவுக்காக உயிரை விட வேண்டாம், இந்தியாவுக்காக வாழ்ந்தாலே போதும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் பிறந்தவர்களில் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். நண்பர்களே, இனி ஓர் இந்திய பிரதமர், ஆஸ்திரேலியா வரவதற்காக நீங்கள் இனி 28 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டாம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பெயர் கொண்டு திகழ்கிறது. அதேபோல ஜனநாயகத்திலும் சிறப்புடன் விளங்குகிறது. பல விஷயங்களில் இரு நாடுகள் ஒற்றுமை கொண்டுள்ளது.

இந்தியாவுக்காக உழைக்க 250 கோடி மக்களின் கரங்கள் இருக்கின்றன. இதில் சுமார் 200 கோடி மக்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். நாம் நாட்டுக்காக உழைக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். இரவு புறப்பட்டால் மறுநாள் இங்கு வந்து சேர முடியும். ஆனால் நான் உங்களை வந்து பார்ப்பதற்கு 28 ஆண்டுகள் ஆகியுள்ளது.

எந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதோ, அங்கு வருவதற்கு எனக்கு தயக்கம் இல்லை. இந்தியா எதற்காக பின்தங்கி இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எளிய மக்களுக்காக உழைத்து, பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.

இந்தியாவில் ஏழை மக்களுக்கு கழிவறைகள் கட்டுவதற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும். இந்தச் சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்தியாவின் மீதான தவறான பார்வை சுத்தப்படுத்தப்படும். இந்தியா உலகளாவிய அளவில் வல்லரசாக நான் விருப்பப்படுகிறேன். இரு நாடுகளுமே பெரிய ஜனநாயக நாடுகளாகும், என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்