முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் அட்டைக்கு விண்ணப்பம்: அதிகாரிகள் ஆய்வு

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. 18 – புதிதாக பால் அட்டை க்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று  இன்று முதல் அதிகாரிகள் ஆய்வு  நடத்துகிறார்கள் . விண்ணப்பங்களை சரி பார்த்த பிறகு டிசம்பர் 1 ந்தேதி முதல் விண்ணப்பதாரா்களுக்கு பால் வழங்கப்படும் என்றும் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் தினமும் சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.புதிதாக பால் அட்டை கேட்டு சுமார் 15 ஆயிரம் பேர் ஆவின் நிறுவனத்தில் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் 11 மாதங்களாக அட்டை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆவின் நிறுவனம் புதிதாக பால் அட்டை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு நேற்று  முதல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்கள்.
16 மண்டலங்களிலும் இந்த ஆய்வு பணி நடைபெறும். விண்ணப்பித்தவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.பின்னர் ஆவின் நிறுவனம் பிரத்யேகமாக அச்சிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் தகவல்களை பூர்த்தி செய்து முகவரி சான்றுக்கான அத்தாட்சியை பெற்றுக்கொள்வார்கள். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1–ந்தேதி முதல் புதிய பால் அட்டைகள் வழங்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘தனியார் பாலை விட ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 குறைவான விலையிலேயே அரசு வழங்குகிறது.மேலும் தரமானதாக இருப்பதால் விற்பனையில் எந்த குறையும் எற்படவில்லை. விலை குறைவாக இருப்பதால் யாரும் அட்டைகளை வாங்கி கூடுதல் விலைக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை தடுப்பதற்காக வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்