முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிககுறைவு: அமைச்சர்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.18 - மக்களின்  முதல்வர் ஜெயலலிதா  வழிகாட்டுதலின்படி   மின் கட்டணம் மாற்றம்  காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதை ஜெயலலிதா  அறிவித்த   உத்தரவாதத்தை அவரது வழியில் செயல்படும் இந்த அரசு, நிறைவேற்றும் என்று பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்
இது குறித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
12.11.2014 அன்று நடைபெற்ற தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதில் தமிழக அரசைக் கண்டித்தும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டு அதற்கு தமிழக அரசை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது ‘அவலை நினைத்து உரலை இடிப்பதாக’ உள்ளது.  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இந்திய அரசியல் வரலாறும் தமிழக அரசியல் வரலாறும் தெரியவில்லை என்பதையே இது எடுத்து காட்டுகிறது. மின் கட்டண நிர்ணயக் கொள்கை குறித்து தற்போதைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை மற்றும் முந்தைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை பற்றியும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியவில்லை போலும்!  எனவே, அது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெளிவுபடுத்துவது எனது கடமை என கருதுகிறேன். 
கூhந நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn ஹஉவ 1998 என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில சலுகைகளை அன்றைய பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.   ஒரு சில நன்மைகளை பெறுவதற்கு கடினமானவைகளை ஏற்றுக் கொள்வது போல, அன்றைய மத்திய பாரதிய ஜனதா அரசு சில சலுகைகளை அறிவித்து அதன் மூலம் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள தூண்டியது.  அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது தான் மத்திய அரசிடமிருந்து யஉஉநடநசயவநன யீடிறநச னநஎநடடியீஅநவே யீசடிபசயஅஅந என்ற திட்டத்தின் கீழ் முன்பணமாக நிதியைப் பெற்றது.  இதற்காக மத்திய அரசோடு ஓர் ஒப்பந்தம் போடுவதாக அன்றைய திமுக அரசு ஒப்புக் கொண்டது.  அந்த ஒப்பந்தத்தின் படி மின்சாரத் துறையில் பல சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.  அதாவது கூயஅடை சூயனர நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn என்ற ஆணையத்தை அமைப்பது,   மின் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான விண்ணப்பத்தை அதாவது கூயசகைக சுநஎளைiடிn ஞநவவைiடிn மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முன் தாக்கல் செய்வது,  அதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணங்களை நிர்ணயம் செய்வது என எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளித்தது.

 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சராசரி மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான (உடிளவ டிக ளரயீயீடல)  செலவு என்ன என்பதை நிர்ணயம் செய்து அதனடிப்படையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.  தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை இந்த ஆணையம் 2003-2004 ஆம் ஆண்டுக்கு நிர்ணயம் செய்த தொகை யூனிட்டுக்கு 3 ரூபாய் 2 பைசா.   இதுவே, 2010-2011 ஆம் ஆண்டுக்கு, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் இறுதியில் யூனிட்டுக்கு  4 ரூபாய்
93 பைசாவாக உயர்ந்தது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலக்கரி போன்ற இடுபொருட்களின் விலை உயர்வு, முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியால் ஏற்படுத்தப்பட்ட பெரும் கடன் சுமையின் காரணமாக அதற்கு செலுத்தப்படவேண்டிய வட்டித் தொகை, பணியாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றின் காரணமாக, தற்போது யூனிட் ஒன்றுக்கு உற்பத்தி மற்றும் விநியோக செலவு 6 ரூபாய் 14 பைசா என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசமாக நிர்ணயித்து கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது.   இறுதி உத்தரவுகளை இன்னும் வழங்கவில்லை.

 1998-ல் நுடநஉவசiஉவைல சுநபரடயவடிசல ஊடிஅஅளைளiடிn ஹஉவ  என்ற சட்டத்தை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வர முயன்றபோது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு மத்திய அரசில் அங்கம் வகித்தது.  எனவே, இதற்கான வரைவு சட்டத்தில்  யாருக்கும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ மின்சாரம் வழங்கவே இயலாது என இருந்த ஷரத்துக்களைப் பார்த்து, அதில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி ஒரு சிலருக்கு மானியம் வழங்கலாம் என்பதை அதில் சேர்க்க வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.  வரைவு சட்டத்தில், “கூhந ளுவயவந ஊடிஅஅளைளiடிn றாடைந னநவநசஅiniபே வாந வயசகைக ரனேநச வாளை ஹஉவ, ளாயடட nடிவ ளாடிற ரனேரந யீசநகநசநnஉந வடி யலே உடிளேரஅநச டிக நடநஉவசiஉவைல, ரெவ அயல னகைகநசநவேயைவந யஉஉடிசனiபே வடி வாந உடிளேரஅநச’ள டடியன கயஉவடிச, யீடிறநச கயஉவடிச, வடிவயட உடிளேரஅயீவiடிn டிக நநேசபல னரசiபே யலே ளயீநஉகைநைன யீநசiடின டிச வாந வiஅந யவ றாiஉh வாந ளரயீயீடல ளை சநளூரசைநன டிச வாந பநடிபசயயீhiஉயட யீடிளவைiடிn டிக யலே யசநய, வாந யேவரசந டிக ளரயீயீடல யனே வாந யீரசயீடிளந கடிச றாiஉh ளரயீயீடல ளை சநளூரசைநன” என்று இருந்தது.  இதன்படி, மாநில அரசால் யாருக்கும் எந்தச் சலுகையும் வழங்க இயலாத நிலை இருந்தது.  இதனை மாற்றி உட்பிரிவு 5 என்பதை சட்டத்தில் சேர்க்க வைத்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான்.
2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி திமுகவின் துணையோடு மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, அது வரை நடைமுறையில் இருந்த மின்சார சட்டம், மின் வழங்கல் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்து 2003ஆம் ஆண்டைய மின்சாரச் சட்டம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது.  இந்த சட்டம் மின்சாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து  கைப்பற்றி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்க வழிவகை செய்தது.  இந்த சட்டத்தின் பிரிவு 62-ன் கீழ் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மின்சாரக் கட்டணங்களை நிர்ணயிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த சட்டத்தின் பிரிவு 61(ப)-ன்படி நுகர்வோருக்கான மின்கட்டண விகிதங்கள் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்படும் செலவை ஒத்து இருக்க வேண்டுமென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

  2003 ஆம் ஆண்டைய  மின்சார சட்டம் மற்றும்  2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மின் கட்டண ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடன் மீதான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மின் விகிதக் கட்டணம் மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும்.  அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில் மின் பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின்கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டுமென ஆணையிட்டுள்ளது. 

இந்த அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு தற்போது 3298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை 6896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஒய்வூதியத்திற்கான செலவு நடப்பாண்டில் 4370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டி செலவினம் 8463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டண நிர்ணய அறிவிப்பை வெளியிட்டு அதன் மீது கருத்து கேட்புகளை நடத்தியுள்ளது. 

 அம்மா அவர்களின் அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றபோது மின்சார வாரியத்தின் கடன் சுமை 45,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியிருந்தது.   முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் 2010-11 ஆம் ஆண்டில் 21,892 கோடி ரூபாய் கடன் பெற்று அதில் தவணைத் தொகை மற்றும் வட்டிக்கு மட்டும்
12,667 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார வாரியம் செலுத்தியுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

 மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது எனக் கூறும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு மின் உற்பத்திக்கான இடுபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவது தெரியுமா? தெரியாதா? மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கானத் தீர்வையை டன் ஒன்றுக்கு ரூ.51.50லிருந்து ரூ.103/-ஆக 11.07.2014 முதல் உயர்த்தியுள்ளது. மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ளபடி 2.5 சதவீதம் சுங்கவரியும், 2 சதவீதம் உடிரவேநச எயடைiபே னரவல-ம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். மேலும், தமிழகத்திலுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணத்தையும் 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 6.5 சதவீதம் உயர்த்தியுள்ளது.  மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான, இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்  மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் (ழுஹஐடு) நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலையை 1.11.2014 முதல் மத்திய அரசு 1 ஆஆக்ஷகூரு எரிவாயுவின் விலையை  4.2 ரு.ளு. னுடிடடயச என்ற விலையிலிருந்து 5.05 ருளு னுடிடடயச ஆக உயர்த்தியுள்ளது.  இதனால், இயற்கை எரிவாயுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவு யூனிட் ஒன்றுக்கு இருபது சதவீதம் உயர்ந்துள்ளது.

 தமிழ்நாட்டிலுள்ள அனல் மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வெளி மாநிலங்களிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.  இதனால் நிலக்கரி விலையுடன் போக்குவரத்துச் செலவும் சேர்ந்து மின் தயாரிப்புச் செலவை அதிகரிக்கும்.  நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகிலேயே அனல் மின்நிலையங்கள் அமையப் பெற்றால் குறைவான போக்குவரத்துச் செலவின் காரணமாக மின் உற்பத்தி செலவு குறைவாகவே இருக்கும்.   அதிகப் போக்குவரத்துச் செலவு இருந்தாலும், நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அருகில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பிலுள்ள சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நிலக்கரி வளம் அபரிமிதமாக உள்ளது.  சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள நிலக்கரி வளத்தைப் பயன்படுத்தி அம்மாநிலத்திலுள்ள அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 76 சதவீதமாகும்.  இதனால், அங்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.2.19 என்ற வீதத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. இருப்பினும், வீட்டு மின் இணைப்புகளுக்கு 200 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.620/-ம்
500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.1,650/-ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.இதைப்போன்றே, பாரதிய ஜனதா  ஆட்சிப் பொறுப்பிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்திச்  செலவு யூனிட்  ஒன்றிற்கு ரூ.2.66 என்ற அளவிலேயே உள்ளது.  இருப்பினும்,
200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நகர்ப்புறக் குடியிருப்பு வீட்டு மின் உபயோகிப்போர் ரூ.855/-ம் 500 யூனிட் பயன்படுத்துவோர் ரூ.3365/-ம் மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 ஆனால், தமிழகத்தில் தான் இரண்டு மாதங்களுக்கு
200 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.320/-ம், 500 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோர்க்கு ரூ.1,330/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
 வீட்டு மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு, மின் கட்டணங்களில் மிக அதிக அளவு மானியமாக வழங்குவது அஇஅதிமுக அரசு தான்.  புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 2011 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து  மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.  மேலும், 2014-15 ஆம் ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய் மின் மானியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும்,  மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும். அவ்வாறு வெளியிடப்படும் கட்டணம் காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் என்பதை தெரித்துக் கொள்கிறேன்..
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்