முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ.19 - ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் காயம் காரணமாக ரோஜர் ஃபெடரர் விலகியதால்,செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோத இருந்தார்கள். ஆனால், காயம் காரணமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த இறுதிச் சுற்றிலிருந்து விலகினார் ஃபெடரர்.

இதனால் ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் சாம்பியன் ஆனார் ஜோகோவிச். ‘‘இந்தப் போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் கலந்துகொள்ள மிகவும் முயற்சி செய்தேன். ஆனால் போட்டிக்குத் தேவையான உடல்தகுதியை அடையவில்லை. என்னுடைய வயதில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை." என்றார் ஃபெடரர்.

தொடர்ந்து மூன்று முறை இந்தப் போட்டியை வென்றுள்ளார் ஜோகோவிச். இதனால், ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸில் இவான் லென்டிலுக்குப் (1985-87) பிறகு தொடர்ச்சியாக 3 முறை பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago