முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி காஷ்மீரில் 22-ந் தேதி பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, நவ.19 - காஷ்மீர் மாநில சட்டசபைக்கு வருகிற 25-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் உள்ள 87 சட்டசபை தொகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்ததில் 6 தொகுதிகளில் 3 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று மிஷன்-44 என்ற பெயரில் பாஜக தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

பாஜகவை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள், 87 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிர மாக நடந்து வருகிறது. பாஜவை பொருத்தவரை மோடி பிரசாரத்தையே நம்பி இருக்கிறார்கள்.

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி விரைவில் நாடு திரும்ப உள்ளார். அதன்பிறகு வரும் 22-ஆம் தேதிஅவர் காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவ உள்ளார். அன்று அவர் கிஷ்ட்வார் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

27-ஆம் தேதி ஸ்ரீநகர் மண்டலத்திலும், 30-ஆம் தேதி உதம்பூர் மண்டலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். மொத்தம் 6 பொதுக்கூட்டங்களில் மோடி பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்