முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முனைப்புடன் செயல்பட ராகுலுக்கு சித்தராமய்யா அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், நவ.19 - பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார்கள்.

ராகுல் நடத்தும் அரசியல் சரி அல்ல என்பது அவர்களது குற்றச்சாட்டாக உள்ளது. இன்னும் சில தலைவர்கள், ராகுலை தவிர்த்து விட்டு பிரியங்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் என்று கூறி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும் சேர்ந்துள்ளார். அவர் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ராகுலின் அரசியல் செயல்பாடுகள் போதாது. இன்னும் உறுதியாக முனைப்புடன் அவர் செயல்பட வேண்டும். நாட்டு மக்களை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். சித்தராமய்யாவின் இந்த பேச்சால் காங்கிரசில் உளஅள ராகுல் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்