முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேருவின் பணிகளை இருட்டடிப்பு செய்வதா? சோனியா

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.19 - முன்னாள் பிரதமர் நேருவின் வாழ்க்கை மற்றும் அவரின் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தின விழாவையொட்டி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு தொடங்கியது.

இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய தாவது:

நாட்டின் முதல் பிரதமரான நேரு, மதச்சார்பின்மையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந் தார். இந்தியாவையும் மதச்சார் பின்மையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இதுபோன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் மதச்சார் பின்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானதாகும். மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேருமானால், அதை பாதுகாக்க எனது வாழ்வின் இறுதி வரை போராடுவேன் என்று நேரு கூறியுள்ளார்.

நேருவின் வாழ்க்கை மற்றும் அவரின் பணிகள் இப்போது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மேலும், அது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன; திரித்துக் கூறப்படுகின்றன.

நவீன இந்தியாவை கட்டமைப் பதில் நேரு முக்கிய பங்காற்றினார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக மட்டுமின்றி, பலமான பொதுத்துறையை கட்டமைப் பதற்கும் அவர் பாடுபட்டார். அவரின் பணிகளால் விளைந்த பலன் களைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம்.

பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா ஒற்றுமை யாக இருப்பதற்கு நாடாளுமன்ற ஜனநாயகமும், மதச்சார்பற்றத் தன்மையும்தான் சரியான கொள்கைகள் என்ற நேருவின் கருத்து இப்போது நிரூபண மாகியுள்ளது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இந்த மாநாட்டில் திரிணமூல் கட்சித் தலைவர் மம்தா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் பொதுச் செயலாளர் டி.பி.திரிபாதி, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago