முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு முதல் கியாஸ் மானியம் வங்கியில் போடப்படும்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை கியாஸ் இணைப்பு உள்ளவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு 2013ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் சமையஸ் கியாஸ் சிலிண்டர் மானியம் இல்லாமல் முழு விலை கொடுத்து பெற வேண்டும். சிலிண்டருக்கான மத்திய அரசின் மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போடப்படும். இதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளரும் வங்கி கணக்கை தொடங்கி அதனை சமையல் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
முதல் கட்டமாக புதுவை உட்பட 291 மாவட்டங்களில் சமையல் கியாஸ் நேரடி மானியம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 1 5ம் தேதி மேலும் 54 மாவட்டங்களில் இந்த திட்டம் சில மாற்றங்களுடன் விரிவுபடுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தற்போது ஆதார் அட்டை அவசியம் இல்லை. வங்கி கணக்கு தொடங்கி இருந்தால் மட்டுமே போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை ஜனவரி 1ம் தேதி முதல் முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் ஜனவரி முதல் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் நேரடி மானியம் பெற வங்கி கணக்கு அல்லது ஆதார் அட்டை அவசியம் ஆகும். இந்த இரண்டு ஆவண ங்களில் ஏதாவது ஒன்றை கியாஸ் ஏஜென்சிகளிடம் பதிவு செய்ய வேண்டும். சிலிண்டர் பதுக்கல், அதிக விலைக்கு விற்றல், எஸ்எம்எஸ் அனுப்பியும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாமல் அலைக்கழித்தல் போன்ற பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க நேரடி மானியம் திட்டத்தை மத்தி ய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் ப யன்படுத்துவோர் ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது முழு தொகை கொடுத்து வாங்க வேண்டும். சிலிண்டருக்கான மானிய தொகை ரூ. 560 வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் உடனே போடப்படும். இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஏற்கனவே இரண்டரை லட்சம் போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு து ண்டிக்கப்பட்டது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நேரடி மானிய திட்டம் அமலுக்கு வருகின்றன. அப்போது தமிழ்நாட்டில் மேலும் ஒன்றரை லட்சம் போலி இணைப்பு துண்டிக்கப்படும். சமையல் கியாஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு தொடங்கி அந்த எண்ணை விநியோகஸ்தர்களிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்களை அல்லது ஆதார் எண்களை விநியோகஸ்தர்களிடம் கொடுத்து ப திவு செய்து கொள்ள வேண்டும்.
அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியம் கழித்து வழக்கமான முறையில் ரூ. 400 செலுத்தி பெற்று கொள்ளலாம். அதன் பிறகு மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். அந்த காலத்தில் சமையஸ் கியாஸ் மானியம் தொகை கழி்க்காமல் முழு தொகை செலுத்தித்தான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்ன ர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. முழு தொகை கொடுத்துதான் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சமையல் கியாஸ் நேரடி மானியம் பெற வங்கி கணக்கு அவசியம் என்பதால் வங்கி கணக்கு தொடங்காதவர்கள் தற்போது வங்கிகளை நாடி செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து