முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு எபோலா நோய்

புதன்கிழமை, 19 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து டெல்லி வந்த வாலிபருக்கு எபோலா நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடு களான சியரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. இந்த நோய் இதுவரை 5 ஆயிரம் பேரை பலிவாங்கி விட்டது. மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்நோயை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு அந்தந்த நாடுகள் எபோலா ப ரிசோதனை செய்து வருகின்றன.
அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் இருந்து கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 25 வயது இளைஞருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு எபோலா நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. பிரத்யேக சிகிச்சை பிரிவில் அவருக்கு பரிசோதனை செய்த போது சிறுநீரகம் மற்றும் விந்தணுவில் எபோலா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்,
லைபீரியாவில் தங்கியிருந்த போது இந்த இளைஞருக்கு எபோலா நோய் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை லைபீரியாவில் அதற்கான சிகிச்சையும் அவர் எடுத்துள்ளார். இந்நோய் முழுமையாக குணமடைந்து விட்டதாக அவர் கொண்டு வந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞரின் ரத்தத்தை ப ரிசோதனை செய்த போது எபோலா தொற்று எதுவும் காணப்படவில்லை. ஆனாலும் விந்தணுவில் அவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வேறு ஒருவருடன் உறவு வைத்து கொள்ளும் போது அவர் வழியாக எபோலா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இந்த இளைஞருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட வே ண்டியுள்ளது. பெரியளவில் பாதிப்பு ஏதும் இருக்காது. சிகிச்சைக்கு பின் விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இதுவரை எபோலா நோய் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் லைபீரியாவில் இருந்து டெல்லி வந்த இளைஞருக்கு முதன்முதலாக எபோலா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து