முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீன அதிபரின் சிறப்புத் தூதர் சுஷ்மாவுடன் சந்திப்பு

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் நாட்டு அதிபரின் சிறப்புத் தூதர், நேற்று டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.
பாலஸ்தீன அதிபர் தனது சிறப்புத் தூதராக டாக்டர் நபில் ஷாத்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். டெல்லி வந்த நபில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்தார்.
கடந்த ஜூலை மாதம், இஸ்ரேல், பாலஸ்தீனம் நடத்தி வந்த தீவிரத் தாக்குதலின் பின்னணியில், பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லைஎன்று கூறியிருந்தார். அதேசமயம், இந்திய அரசோ, இஸ்ரேல் தாக்குதலைக் கண்டிக்கவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்தது. காஸா முனையில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவாதிக்க முன்வராதது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், காஸாவில் இஸ்ரேல் நடத்திய போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.மோடி அரசு வந்தது முதலே இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களும் ஏற்பட்டு வருகின்றன.
ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து