முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏடிஎம்-ல் பெண் மீது தாக்குதல்: சிக்காத குற்றவாளி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

பெங்களூர் - கடந்த ஆண்டு பெங்களூருவில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி ஊழியர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார். சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்தது. ஆனால் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஜோதி உதய்(44) என்கிற வங்கி பெண் அதிகாரி கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த ஒருவர் ஜோதியை சரமாரியாக தாக்கி பணத்தையும் செல்போனையும் கொள்ளையடித்து தப்பினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை அருகில் இருந்தவர் கள் மருத்துவமனையில் சேர்ந்த னர். அங்கு 6 மாதம் தீவிர சிகிச்சை பெற்ற அவர், 3 அறுவை சிகிச்சை களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஏடிஎம் மையத்தில் பெண்ணை கொலைவெறியுடன் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழு வதும் பெரும் பரபரப்பை ஏற் படுத்தின. அந்த வீடியோவில் குற்றவாளியின் முகம் தெளிவா கப் பதிவாகியிருந்தது. குற்றவாளி யைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கர்நாடகம், தமிழகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். பேருந்து நிலையங்களிலும்,ரயில் நிலையங்களிலும் குற்றவாளியின் உருவப்படத்தை ஒட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே ஜோதியிடம் இருந்து பறித்து சென்ற செல் போனை குற்றவாளி ஆந்திராவில் விற்றது தெரிய வந்தது. எனவே கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி கூறும்போது, “நான் பெங்களூரு மாநகர ஆணைய ராக பொறுப்பேற்ற பிறகு, தனிப்படை போலீஸார் விசா ரணையை முடுக்கி விடுமாறு உத்தரவிட்டுள்ளேன். கூடிய விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்''என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து