முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர் பாதுகாப்புத் திட்டம்: அமைச்சர் அறிவுரை

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் 10.9.2011 முதல் 31.10.2014 வரை கல்வி உதவித் தொகையாக ரூ.191.75 கோடி 8,26,823 பயனாளி களுக்கும், உறுப்பினர் திருமணத்திற்காக ரூபாய் 12.17 கோடி 14,868 பயனாளிகளுக்கும், உறுப்பினரைச் சார்ந்தவர்களின் திருமணத்திற்காக ரூபாய் 158.42 கோடி 1,79,773 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை ரூபாய் 221.14 கோடி 1,76,954 பயனாளிகளுக்கும், விபத்து நிவாரணம் ரூபாய் 109.22 கோடி 11,306 பயனாளிகளுக்கும், தற்காலிக உடல் திறனற்ற காலத்திற்கான மாதாந்திர உதவி ரூபாய் 29.54 கோடி 18,205 பயனாளிகளுக்கும் அனாதை குழந்தைகளுக்காக மாதாந்திர உதவி ரூபாய் 0.78 கோடி 739 பயனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2014-15) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்சொன்ன திட்டங்களுக்காக ரூபாய் 205.99 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், 31.10.2014 வரை 164.33 கோடி ரூபாய் 2,86,258 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழுப்பயன்களும் உறுப்பினர்களுக்கு சென்றடைவதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை செயலாளர்.ககன்தீப் சிங் பேடி, முதன்மைச் செயலாளர் / நிலச்சீர்திருத்த ஆணையர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், மற்றும் நிலச்சீர்திருத்த இயக்குநர்.வ.கலைஅரசி, மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து