முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமார் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஷால் பதில்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - நடிகர் சங்கத்தை விட்டு நீக்க நேரிடும் என்று சங்க தலைவர் சரத்குமார் கூறியிருந்தற்கு நடிகர் விஷால் பதிலளித்து இருக்கிறார். விஷால் கூறியிருப்பதாவது :
சரத்குமாரின் எச்சரிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.எனது மீதான குற்றச்சாட்டு தவறானது. நடிகர் என்ற முறையில் நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் மதிக்கிறேன்.நடிகர் சங்கம் எடுக்கும் முடிவை நான் ஏற்பேன்.
ஆனால் அதற்கு முன்னதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக நான் எங்கே கருத்து தெரிவித்தேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவருடைய அறிக்கை என் உணர்வுகளை பாதித்து விட்டது. நடிகர்களை நாய் என்று கூறிப்பிட்ட ராதாரவி மற்றும் காளை ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் .
யார் எந்த பதவியில் இருந்தாலும் அனைவருக்கும சமநீதி வழங்கப்பட வேண்டும்.எனவே நடிகர்களை கடுமையாக விமர்சித்த ராதாரவி மற்றும் காளையை உடனடியாக சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் இவ்வாறு விஷால் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து