முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசனத்திற்கு வைகை அணை இன்று திறப்பு: முதல்வர்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த வேண்டுமென மக்களின் முதல்வர் ஜெயலலிதா , உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 142 அடி அளவுக்கு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் விளைவாக அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பத்தொடங்கியுள்ளன. இதன்விளைவாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. இதுவரை 141 அடி உயரத்தை எட்டத்தொடங்கியுள்ள முல்லை பெரியாறு அணையின் மூலம் வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மதுரை மாவட்டம், வைகை அணையிலிருந்து, சிவகங்கை மற்றும்இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகள் (மூன்று )மற்றும் இரண்டுக்கு-வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயபெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப்பெருமக்களின்வேண்டுகோளினை ஏற்று, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்மாவட்டங்களில் உள்ள வைகை பழையபாசனப் பகுதிகள் மூன்று மற்றும் இரண்டுக்கு வைகை அணையிலிருந்து 21.ந்தேதி (இன்று) முதல் தண்ணீர்திறந்துவிடஆணையிடப்படுகிறது.இதனால், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில்உள்ள1,09,620 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து