முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைக்கு உதவியவர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை

புதுடெல்லி - எங்களது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று டெல்லி திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை உயர்நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்துசெய்தார்.இதனையடுத்து 5 மீனவர்களும், விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விடுதலையான 5 மீனவர்களும் நேற்று டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர், முன்னதாக இவர்கள் திருச்சி வருவதாக இருந்தது. அதனால் மீனவர்களின் குடும்பத்தார் திருச்சி வந்து ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீனவர்கள் 5 பேரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக மீனவர்கள் தங்கள் விடுதலைப்பற்றி கூறியதாவது: நாங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறோம், எங்கள் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தூக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது இந்திய தூதரக அதிகாரிகள் தான் எங்களுக்கு தைரியம் அளித்தனர். எங்களை விடுவித்த இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக தங்கச்சிமடத்தில் இவர்களது குடும்பத்தார் பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாதம்,மாதம் ரூ.7500 கொடுத்தது மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் கொடுத்தது.வழக்கு செலவுக்காக ரூ.20லட்சம் கொடுத்தது. போன்றவற்றை நினைவுகூர்ந்து ஜெயலலிதாவுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து